3 புதிய திரைப்படங்களில் நடிக்கும் நயன்தாரா!

Print yarlcine.com in விமர்சனம்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது 3 புதிய படங்களில் நடிக்கவிருக்கிறார்.

நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் ரிலீஸாக உள்ளது. நயன்தாரா இப்படத்தில் பார்வையற்றவராக நடித்திருக்கிறார்.

இதேபோல் ரஜினியின் 'அண்ணாத்த' படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, நடிகை நயன்தாரா மேலும் 3 புதிய படங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஒன்று மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் நயன்தாரா.

மற்ற 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதையம்சம் கொண்டவை. தமிழில் தயாராகும் இப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.