பிரேம்ஜி உடன் இருந்தும் குடிக்காமல் இருந்தது மிகப் பெரிய விஷயம்!

Print yarlcine.com in விமர்சனம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் கைவசம் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், மாநாடு படக்குழுவினர் டுவிட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினர். அதில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய சிம்பு, "தான் குடி பழக்கத்தை நிறுத்தி ஓராண்டு காலம் ஆகிறது. பிரேம்ஜி போன்றோர் உடன் இருந்தும் கூட குடிக்காமல் இருந்தது மிகப் பெரிய விஷயம்" என நகைச்சுவையாக பேசினார்.