தளபதி65 பட டைட்டில் சர்ச்சையில்!

Print yarlcine.com in விமர்சனம்

மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் விஜய் பிறந்த நாளையொட்டி படத்துக்கு பீஸ்ட் என்ற பெயர் வைத்துள்ளதாக அறிவித்தனர். மேலும், விஜயின் 2 தோற்றங்களையும் வெளியிட்டுள்ளனர். அந்த இரண்டு தோற்றங்களுமே மாஸாக இருப்பதால் ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

ஆனால் இவற்றில் ஒரு தோற்றத்தில் விஜய் வாயில் சிகரெட் வைத்துள்ளாரா என்று வலைதளத்தில் சிலர் சந்தேகத்தை கிளப்பினர். இன்னும் சிலர் அது துப்பாக்கி தோட்டா என்று விளக்கினர். சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடித்தபடி நிற்கும் தோற்றம் வெளியானபோது எதிர்ப்பு கிளம்பி பின்னர் அந்த காட்சி நீக்கப்பட்டது.
மேலும் விஜய் படத்துக்கு பீஸ்ட் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்ததையும் சிலர் விமர்சித்துள்ளனர். விடுதலை சிறுத்தை கட்சியும், “விஜய் நடிக்கும் படங்கள் தமிழில்தான் எடுக்கப்படுகின்றன.ஆனால் தொடர்ந்து ஆங்கில பெயர்களை சூட்டி தாய்மொழியை புறக்கணிப்பது சரியா''என்று கண்டித்துள்ளது.