வைரலாகும் ஜகமே தந்திரம் தயாரிப்பாளர் ட்வீட்! வெற்றியோ தோல்வியோ... சென்றுகொண்டே இருக்கனும்

Print yarlcine.com in விமர்சனம்

நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜகமே தந்திரம்’.இப்படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தில்,கலையரசன்,ஜோஜூ ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த விமர்சனங்கள் குறித்து படக்குழுவினர் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்பொது இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த், வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றி பெறுவது மட்டும் வெற்றியல்ல, தோற்பது தோல்வியுமல்ல,தொடர்ந்து உங்கள் பாதையில் சென்றுகொண்டே இருக்க வேண்டும்"என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஜகமே தந்திரம்’படத்துக்கு வந்திருக்கும் எதிர்மறை விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.