இந்தியா பெயரை மாற்ற வேண்டும்; நடிகை கங்கனா பரபரப்பு

Print yarlcine.com in சினிமா செய்திகள்

இந்தியா என்ற பெயருக்கு பதிலாக நாட்டின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத் தனது இணையப்பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். அந்தவகையில் தொடர்ந்து சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்டதற்காக கங்கனாவின் கணக்கை, ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் நீக்கியது.

இதையடுத்து கூ என்ற சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார் கங்கனா.

இந்நிலையில் அந்த வலைத்தளத்திலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், இந்தியா என்ற பெயர் அடிமை பெயராக உள்ளது. எனவே அதை மாற்றி, நமது நாட்டின் பழைய பெயரான, பாரதம் என்பதையே வைக்க வேண்டும்.என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், மேற்கத்திய உலகின் மலிவான நகலாக இல்லாமல், வேதங்கள், பகவத் கீதை மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின் மிகப்பெரிய நாடாக நாம் வெளிப்படுவோம். எனவே இந்த அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.