அள்ளி கொடுக்கும் அண்ணன் தம்பி.. கஷ்டப்படும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தலா ரூ.5000 நிதியுதவி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சென்னை:

லாக்டவுன் காரணமாக வறுமையால் வாடும் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு சூர்யா மற்றும் கார்த்தி நிதியுதவி வழங்கி உள்ளனர். கொரோனா பரவல் இரண்டாம் அலையில் தமிழ்நாடு மிக மோசமான பாதிப்பை சந்தித்தது.


35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நாள் தோறும் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். தற்போது தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்குள் வந்துள்ளது.


தொடரும் லாக்டவுன்
கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து லாக்டவுனை அமல்படுத்தி வருகிறது. சினிமா உள்ளிட்ட ஏகப்பட்ட தொழில்கள் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளன. சாதாரண மக்கள் பலரும் வேலை இழக்கும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.ஒரு கோடி
கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தை நன்கு உணர்ந்த நடிகர் சூர்யாவின் குடும்பம் முதல் ஆளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாயை கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கினர். சூர்யா குடும்பத்தை தொடர்ந்து மற்ற முன்னணி நடிகர்களும் நிதியுதவி வழங்கினர்.

அண்ணனை போலவே தம்பியும் அண்ணன் சூர்யாவை தொடர்ந்து தம்பி கார்த்தியும் தனது ரசிக மன்றத்தை சேர்ந்த 150 நிர்வாகிகளின் குடும்பத்திற்கு தலா 5000 ரூபாயை வழங்கி உள்ளார். நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் இந்த பரந்த மனதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


சூர்யா 40
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், வழக்கறிஞராக சூர்யா நடித்து வரும் படம் மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் உள்ளிட்ட படங்களுக்கும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

ஆகஸ்ட் 6
சூரரைப் போற்று படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டு ஒடிடியில் காலடியெடுத்து வைத்த நடிகர் சூர்யா அடுத்ததாக நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள நவரசா ஆந்தாலஜி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 6ம் தேதி சூர்யாவின் நவரசா நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.