நான் சிங்கிள் & அவையளப்பிள்.. வதந்திகளை நம்பாதீங்க.. 4வது திருமணம் குறித்து வனிதா விளக்கம்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சென்னை:

நான்காவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயானவர் நடிகை வனிதா விஜயகுமார். வட இந்திய பைலட்டுடன் 4வது திருமணம் செய்தாரா வனிதா விஜயகுமார்? தீயாய் பரவும் தகவல்! முதல் கணவரான நடிகர் ஆகாஷுடன் ஒரு மகனையும் மகளையும் பெற்றார் வனிதா.

பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்தார். விவாகரத்து பின்னர் ஆந்திராவை சேர்ந்த ஆனந்தராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார் வனிதா. அவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்றார். அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரையும் விவாகரத்து செய்தார். மாஸ்டருடன் காதல் பின்னர் நடன இயக்குநர் ஒருவருடன் காதல் உறவில் இருந்தார் வனிதா. அவரையும் பிரிந்த வனிதா தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். பீட்டர் பாலுடன் திருமணம் தொடர்ந்து யூட்யூப் சேனலை நடத்திய வனிதா, அப்போது பழக்கமான விஷுவல் எடிட்டர் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார். பீட்டர் பாலின் முதல் மனைவி வனிதா மீது புகார் அளிக்க, அந்த திருமணம் பெரும் சர்ச்சையானது. பீட்டரை பிரிந்தார் ஆனால் அடுத்த 4 மாதங்களிலேயே அந்த திருமண வாழ்க்கையும் முறிந்தது. வனிதா பீட்டர் பாலை பிரிந்தார். இந்நிலையில் வனிதா நான்காவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. பைலட்டுடன் திருமணம் வட இந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவரை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொல்கத்தாவில் இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.


நான்காவது திருமணம் இந்த தகவல் ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. இந்நிலையில் நடிகை வனிதா தான் நான்காவது திருமணம் செய்தது உண்மையா என்பது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். சிங்கிள் மற்றும் அவைளப்பிள் அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது, உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக.. நான் வெரி மச் சிங்கிள் மற்றும் அவைளப்பிள்.... அப்படியே இருக்கிறேன்... எந்த வதந்திகளையும் பரப்பவோ அல்லது நம்பவோ வேண்டாம்.. இவ்வாறு நடிகை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அது என்ன அவைளப்பிள்? வனிதாவின் இந்த விளக்கத்தை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகியுள்ளனர். சிங்கிள் என்று மட்டும் சொன்னால் போதாதா? அது என்ன அவைளப்பிள்? விளம்பரமா என கேட்டு விளாசியுள்ளனர். பலரும் நல்ல விளம்பரம் என்றும் கழுவி ஊற்றியுள்ளனர்.