தமிழக அரசுக்கென தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் – இயக்குனர் சேரன் கோரிக்கை

Print yarlcine.com in சினிமா செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக திரைத்துறைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன.
ஓடிடி-யில் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு கருத்தில் கொண்டு மலையாள சினிமாவுக்கு என பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுவரும் நவம்பர் 1-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

இந்நிலையில் கேரள அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இயக்குனர் சேரன், தமிழ் மொழிக்கும் இதுபோன்று தனி ஓடிடி தளம் அவசியம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும்.

சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம்.அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம்”என குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் அந்த பதிவில்,தமிழக முதல்வர் ஸ்டாலின்,நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்துள்ளார்