புது வீட்டில் குடி புகும் ராக்கி பாய்.!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் யஷ். இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கேஜிஎப் திரைப்படம் இவரை இந்தியா முழுவதும் பிரபலமடைய செய்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டீசர் வெளிவந்து பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில் யாஷ் நேற்று பெங்களூருவில் வாங்கியுள்ள புதிய வீட்டிற்கான கிரகப் பிரவேசத்தை இந்து மத முறைப்படி செய்துள்ளார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள் அதில் கலந்து கொண்டனர்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.யஷ் அவரது மனைவி ராதிகா பண்டிட்டை கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது