புருஷன் யாருனு கேட்கிறாங்க... வனிதா வருத்தம்

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விலகினார்.இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வனிதா அளித்த பேட்டியில், "தனியார் டிவிக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சொன்ன விஷயங்களில் சில எனக்குப் பிடிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவருமே ஸ்டார்களாகத் தான் உள்ளே சென்றோம். அனைவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான். அதற்குரிய மரியாதை அனைவருக்குமே கொடுத்து தான் ஆகவேண்டும். அது கொஞ்சம் தளர்வானதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அதனால் தான் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன்.மாதர் சங்கம் எந்தப் பெண்ணிற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் பார்த்துள்ளேன், நிறைய போராடியுள்ளேன். எந்தவொரு மாதர் சங்கமும் எனக்கு சப்போர்ட் செய்யவில்லை. தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் விளம்பரத்துக்காக சப்போர்ட் செய்கிறார்கள்.சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கிறது என்பது உண்மை தான். தனிப்பட்ட விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால், யார் உன் புருஷன் என்று கேட்கிறார்கள் என்றார்.