இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள...ட்விட்டரில் திடீரென டிரெண்டிங்கான கத்தி ஹேஷ்டாக்]

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சென்னை : அஜித் நடித்து வரும் ஃபஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதில் அஜித் தனது பழைய இளமையான தோற்றத்திற்கு மாறி உள்ளார். அதிகப்படியாக ஆக்ஷன் காட்சிகள், பைக் ரேஸ் காட்சிகள் படத்தில் உள்ளது என்பதை ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் காட்டுகிறது.

வலிமை படத்தின் மொத்த நடிகர்கள் லிஸ்ட்டையும் வெளியிட்ட படக்குழு! வைரலான கத்தி ஹேஷ்டாக் அறிவித்தபடி மோஷன் போஸ்டர் மற்றும் ஃபஸ்ட்லுக்கை போனி கபூர் வெளியிட்டார். வலிமை படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே கத்தி என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டது. இதில் கத்தி மற்றும் வலிமை மோஷன் போஸ்டர்களை ஒப்பிட்டு பலரும் கமெண்ட் செய்ய துவங்கி விட்டனர். எதிர்பார்ப்பை எகிற வைத்த வலிமை மோஷன் போஸ்டர்...பீஸ்ட் சாதனையை முறியடிக்குமா ? கிண்டலடித்த விஜய் ரசிகர்கள் அத்துடன் வலிமை மோஷன் போஸ்டரில் ஆரஞ்ச் நிற போக்கிரவுண்டில் ஏராளமானோர் கையில் ஆயுதங்களுடன் நிற்பது போலவும், அவர்களை பார்த்து அஜித் திரும்பி நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இதில் பிகில் படத்தில் வந்த கட்-காப்பி-பேஸ்ட் என கிண்டல் செய்து கருத்து பதிவிட்டுள்ளனர்.

யங் அண்ட் ஸ்மார்ட் லுக்கில் தல… தாரமான அப்டேட்… வலிமை திருவிழாவாக கொண்டாடும் ரசிகர்கள் ! கத்தி தான் பெஸ்ட்டா கத்தி போஸ்டர் தான் இதுவரை வெளியிடப்பட்ட கோலிவுட் மோஷன் போஸ்டர்களிலேயே சிறந்தது என பலர் புகழ்ந்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள். கிட்டதட்ட 50,000 க்கும் அதிகமானவர்கள் கத்தி ஹேஷ்டாக்கில் கருத்து பதிவிட்டுள்ளனர். இவங்க பாத்த வேலையா இது என்னடா வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டதற்கு கத்தி ஹேஷ்டாக் எதற்காக டிரெண்டிங் ஆகிறது என பலர் குழம்பி போய் விட்டனர். என்ன விஷயம் என்று பார்த்தார் விஜய் ஃபேன்ஸ் கிளப், விஜய் என்ற பெயரில் கணக்கு வைத்திருப்பவர்கள் செய்த வேலை தான் இது. அஜித் - விஜய் ரசிகர்கள் பொதுவாக தங்கள் ஹீரோ தான் பெஸ்ட் என மோதிக் கொள்வது வழக்கம் தான். அதற்காக இப்படியா செய்வார்கள்.