வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது தெரியுமா

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் பட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் . இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் வரும் ஜூலை மாதம் படப்பிடிப்பை தொடங்க படக்குழு தயாராகவுள்ளது.

இந்த படம் தவிர சூர்யா தா.செ.ஞானவேல் இயக்கி வரும் படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. இந்த இரண்டு படங்களை முடித்த பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திற்கான தேதிகள் கொடுத்துள்ளாராம் சூர்யா. இதன் படப்பிடிப்பை செப்டம்பரில் தொடங்க திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, விடுதலை படத்தை முடிக்க முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன்.
இதில் விஜய் சேதுபதி,சூரி,பவானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.இளையராஜா இசையமைத்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.