அமெரிக்காவில் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படம்

Print yarlcine.com in சினிமா செய்திகள்

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டார். இதையடுத்து, உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

அதாவது,சமீபத்தில் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டு,தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பினார்.

இதையடுத்து, ரஜினி தனது குடும்பத்தினருடன் கடந்த 19ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்க மருத்துவமனையில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் அமெரிக்காவின் மாயோ மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து வெளியே வருவதை கண்ட ரசிகர் ஒருவர்,புகைப்படம் எடுத்து உள்ளார்.அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.