எனது பேவரட் நடிகர் தான் என் பயோபிக்கில் நடிக்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா...

Print yarlcine.com in சினிமா செய்திகள்

வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும், குறிப்பாக விளையாட்டு வீரர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் ஆகியோரின் படங்கள் தனி கவணம் ஈர்த்து வருகிறது.அந்த வகையில் எம்.எஸ். தோனி,மேரி கோம்,சாய்னா நேவால்,கீதா போகத் என விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு அவை வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.மேலும் பல விளையாட்டு விரர்களின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியும் பாலிவுட்டில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. பாலிவுட்டில் முன்னணி இயக்குனர்கள் பயோபிக் படங்களை இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், முன்னால் இந்திய அணி வீரரும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சமூக வலைத்தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக பேட்டியளித்தார். அப்போது,‘உங்களுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் யார் நடிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறீர்கள்?’என்று கேட்டதற்கு, “தென்னிந்தியாவில் என்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் என்னுடைய பேவரைட் ஹீரோ சூர்யா தான் நடிக்கவேண்டும்.அவரால் தான், என்னுடைய கதாபாத்திரத்தைச் செய்யமுடியும்” என்று பதிலளித்துள்ளார்.இதை கேட்ட சூர்யா ரசிகர்களும் சென்னை சூப்பர் கிங் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.