கமலுடன் ஜோடி சேரும் நதியா?

Print yarlcine.com in சினிமா செய்திகள்

மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்-கௌதமி வைத்து ரீமேக் செய்யப்பட்டது.இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் மோகன்லால்-மீனா வைத்து இயக்கி இருந்தால் ஜீத்து ஜோசப். தெலுங்கில் வெங்கடேஷ் மீனா வைத்து இயக்கிய அவர் தமிழில் பாபநாசம் 2 படத்தை எடுக்க முடியுமா என்பது கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில் இந்தியன்-2, லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் பாபநாசம்-2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் முதல் பாகத்தில் கமலுடன் ஜோடியாக நடித்த கௌதமிக்கும் கமலுக்கும் இடையே விரிசல் எழுந்து இருப்பதால் அவருக்கு பதிலாக இப்படத்தில் மீனா நடிக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின.ஆனால் இப்போது நதியா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அப்படி பாபநாசம் 2 படத்தில் கமலுடன் நடித்தால் அது தான் அவருடன் நதியா ஜோடி சேரும் முதல் படமாக இருக்கும். மேலும் இவர் திரிஷ்யம் படத்தின் முதல் இரண்டு பாகங்களின் தெலுங்கு ரீமேக்கில் ஐபிஎஸ் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது