அஞ்சாம் பாத்திரா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அதர்வா!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் முரளி.இவரின் மூத்த மகன் அதர்வா.பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.தற்போது இவர் கைவசம் தள்ளிப் போகாதே,குருதி ஆட்டம்,ஒத்தைக்கு ஒத்த,அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன.இதில் தள்ளிப் போகாதே,குருதி ஆட்டம் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில்,நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாளத்தில் மிதுன் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அஞ்சாம் பாத்திரா படத்தின் தமிழ் ரீமேக்கில் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்,விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.