4 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவரின் 39-வது படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்படி ‘ஜெய் பீம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார் என்பது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரியவந்தது.இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ஜெய் பீம் திரைப்படம் வெளியிடப்படும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.