என்னங்கண்ணா இது.. சொகுசு கார் விவகாரம்.. வரிந்துகட்டிய விஜய் ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சென்னை: சொகுசு கார் விவகாரத்தில் ஹைகோர்ட் அறிவுரை கூறியதை தொடர்ந்து #WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நடிகர் விஜய்க்கு பல்வேறு அறிவுரைகளை கூறியிருந்தார். புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும் கூறியிருந்தார். கட்டாய பங்களிப்பு மேலும் வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை எனவும் காட்டமாக தெரிவித்தார்.

மக்கள் செலுத்தக்கூடிய வரி தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதுஎன்றும் நீதிபதி சுப்பிரமணியம் அறிவுறுத்தினார். மனு தள்ளுபடி அபராதம் மேலும் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என்று கூறி விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி. நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்திய அளவில் ட்ரென்டிங் இதனை தொடர்ந்து #WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்ஸ் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் உள்ளது. வரிந்து கட்டிய ரசிகர்கள் தளபதி விஜய்க்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என விஜய் ரசிகர்கள் வரிந்து கட்டியுள்ளனர். #WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்யும் ரசிகர்கள், விஜய்க்கு ஒன்று என்றால் ஓடோடி வருவோம் என குறிப்பிட்டு வருகின்றனர்.

வரி கட்டிய ரசீது மேலும் விஜய் ஏற்கனவே வரியை கட்டிவிட்டார் என்று டிவிட்டி வரும் ரசிகர்கள் அதற்கான பில்லையும் ஷேர் செய்து வருகின்றனர். விஜய் வரிக்கட்டிய பில் வைரலாகி வருகிறது. என்னங்கண்ணா இது.. நீதிமன்றம் விஜய்யை விளாசிய செய்தியை குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன், விஜய் ஸ்டைலில் என்னங்கண்ணா இது என கேட்டு பதிவிட்டுள்ளார்.