இயக்குனர் பொன்ராம் பெயரில் பண மோசடி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் இப்போது சசிகுமார் நடித்துள்ள 'எம்.ஜி.ஆர் மகன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப் போயிருக்கிறது. இதையடுத்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், இவர் பெயரில் சமூக வலைதளங்களில் போலியாக கணக்கு தொடங்கி சிலர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்கடந்த சில நாட்களாக பிரபலங்களின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி பணம் கேட்டு வருவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.