வாடிவாசல் படத்தின் புதிய அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நாளை மாலை 5.30 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.