திட்டிய நெட்டிசன்... கூலாக பதிலளித்த சௌந்தரராஜா!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இடி முழக்கம் என்ற படத்தில் சௌந்தரராஜா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பலரும் சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.அப்போது நெட்டிசன் ஒருவர் ‘இந்த நாய் யாருன்னே தெரியாது... என்று பதிவு செய்தார். இதற்கு ‘நான் நன்றி உள்ள நாய் நண்பா’ என்று நடிகர் சௌந்தரராஜா கூலாக பதில் அளித்து இருக்கிறார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.