ரெஜினாவின் ‘சூர்ப்பனகை’ வித்தியாச போஸ்டர் வெளியீடு.. விரைவில் புதிய அப்டேட்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா.  அதன்பிறகு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், சக்ரா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலும் ரெஜினா நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. தெலுங்கு மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ரெஜினா, வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' படத்தை கைவசம் வைத்துள்ளர். தற்போது ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கிய கார்த்திக் ராஜூ இயக்கதில் நடித்து வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ‘சூர்ப்பனகை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வெண்ணிலா கிஷோர், அக்‌ஷரா கௌடா ஆகியோர்  நடித்து வருகின்றனர்.சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்று விட்டது. தற்போது தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ரெஜினா வித்தியாசமாக தோன்றியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதையடுத்து விரைவில் டிரெய்லர் வெளியிடவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.