சிம்புவுடன் டூயட் பாடிய சிவாங்கி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய அவர், சிவகார்த்திகேயனின் டான், சிவா உடன் காசேதான் கடவுளடா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பல்வேறு படங்களில் பாடல்களும் பாடி வருகிறார். அந்த வகையில், தற்போது ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயன்’ என்கிற படத்துக்காக நடிகர் சிம்புவுடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை பாடி உள்ளார் சிவாங்கி. ‘மச்சி’ என தொடங்கும் அப்பாடலின் புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. விரைவில் இப்பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர்.மாயன்’ திரைப்படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.