பிரபல இந்தி பட தயாரிப்பாளர் அனில் சூரி கொரோனாவுக்கு பலியானார்.

Print yarlcine.com in சினிமா செய்திகள்

இவருக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.இதுகுறித்து அனில் சூரியின் சகோதரரும் தயாரிப்பாளருமான ராஜீவ் சூரி கூறும்போது, ‘’காய்ச்சல் சளியால் அவதிப்பட்ட அனில் சூரியை மும்பையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் 2 மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டன. இதையடுத்து இன்னொரு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலன் இன்றி இறந்து போனார்“ என்றார். மறைந்த அனில் சூரி இந்தியில் கமல்ஹாசன், சுனில்தத், ஹேமமாலினி நடித்த ‘ராஜ் திலக்‘ படத்தை தயாரித்தவர். அமிதாப்பச்சன் நடித்த மன்ஸில், ராஜ்குமார், ரேகா ஜோடியாக நடித்த கர்ம யோகி, ராஜேஷ் கன்னா, ஜிதேந்திரா நடித்த பெகுனாஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். அவரது மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.