நடிகை மேக்னாராஜின் கணவரும், நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்

Print yarlcine.com in சினிமா செய்திகள்

கிருஷ்ண லீலை’, ‘உயர்திரு 420’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘நந்தா நந்திதா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர், மேக்னா ராஜ். இவருடைய தாயார் பிரமிளா ஜோசி, ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர். தந்தை சுந்தர்ராஜன், கே.பாலசந்தர் இயக்கிய ‘தப்புத்தாளங்கள்’ படத்தில் நடித்தவர். மேக்னா ராஜுக்கும், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் பெங்களூருவில் வசித்து வந்தார்கள்.சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜுனின் உறவினர் ஆவார். கன்னட பட உலகில் முன்னணி நடிகராக இருந்தார். அவர், நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. அவருடைய உடலுக்கு கன்னட பட உலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.