பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. ராதிகாவுக்கு பாரதிராஜா வாழ்த்து!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ராதிகா. சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் ராதிகா, தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். சீரியல்களை தயாரித்தும் வருகிறார். ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் நடிகை ராதிகா.பாரதிராஜா வாழ்த்துஇந்நிலையில் நடிகை ராதிகா கடந்த 10 ஆம் தேதியுடன் தமிழ் சினிமாவில் தனது 42 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு பலரும் நடிகை ராதிகாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய அவரது குருவான இயக்குநர் பாரதிராஜா நெகிழ்ச்சி பொங்க வாழ்த்து கூறியுள்ளார்.