பரிசா அம்மா வேணும்ப்பா’: நிறைவேறுமா கயலின் ஆசை?

Print yarlcine.com in சினிமா செய்திகள்

கொரோனா வைரஸ் காரணமாக 3 மாதங்களுக்கும் மேல் சீரியல் ஷூட்டிங்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பழைய எபிசோட்கள் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டன. தற்போது அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் படபிடிப்புகள் நடத்தப்பட்டு, பழையபடி சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.சில சீரியல்கள் 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை ஒளிபரப்பாகின்றன. அந்த வகையில் விஜய் டிவி-யில் தினமும் இரவு 9.30 மணிக்கு ‘செந்தூரப்பூவே’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் முதன் முறையாக, சினிமாவிலிருந்து, சின்னத்திரைக்குள் நுழைந்திருக்கிறார் ரஞ்சித். நடுத்தர வயது (45) கொண்ட துரைசிங்கத்தைப் பற்றிய கதை. மனைவியை இழந்த இவர் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன். இவருக்கு கயல்விழி மற்றும் கனிமொழி என இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு, மறு திருமணம் பற்றி துரைசிங்கம் யோசிக்கவில்லை.அவரது அம்மாவும், தங்கையும் ஜோசியரை பார்க்க சென்றபோது, ‘உங்க செல்ல பேத்தி கயல்விழியோட ஜாதக படி, உங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கற யோகம் இருக்கு. அதோட, அந்த பொண்ண, கயலே கூட செலக்ட் பண்ணலாம் ‘ என்கிறார். அதே நேரத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கு வரும் ஆசிரியை ரோஜாவிடம், பிள்ளைகள் அன்பாக இருப்பதைப் பார்த்து மொத்தக் குடும்பமும் சந்தோஷப் படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்து, ‘பேசாம அண்ணனுக்கு ரோஜாவையே கல்யாணம் பண்ணி வச்சிடலாமா?’ என்கிறார் துரை சிங்கத்தின் அம்மா. ஆனால் ரோஜாவோ வேறொருவரை காதலித்துக் கொண்டிருக்கிறார்.இதற்கிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கயல் தன் பிறந்தநாளில், அப்பா வாங்கிக் கொடுத்த பரிசு பிடிக்கவில்லை என்கிறாள். ’சரி அப்படின்னா உனக்கு என்னவேணும் கேளு’ என துரைசிங்கம் கேட்க, ‘எது கேட்டாலும் தருவீங்களா’ என்கிறாள் கயல். ’கேளுடா தங்கம்’ என துரை சொல்ல, ‘ப்ராமீஸ்?’ என அதை உறுதிப்படுத்த சொல்கிறாள் கயல். ‘ப்ராமீஸ்… நீ கேட்டு நான் இல்லன்னு சொல்வேனா, உனக்கு என்னடா வேணும்’ என அப்பா கேட்க, ‘அம்மா வேணும்ப்பா’ என்கிறாள் கயல்.கயல் சொன்னதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் அதிர்ந்துப் போகிறது. சரிடா… என மகளை அணைத்துக் கொள்கிறார் துரை சிங்கம். ரோஜா எப்படி கயலின் அம்மாவாகிறாள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.