ஆன்லைன் தளத்தில் வெளியிடலாமா என்பது குறித்து ட்விட்டரில் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

சைலன்ஸ் திரைப்படத்தை ஆன்லைன் தளத்தில் வெளியிடலாமா என்பது குறித்து ட்விட்டரில் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஹேமந்த் மதுகுமார் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘நிசப்தம்'. தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் தயாராகியுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு ‘சைலன்ஸ்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் சென்ற ஏப்ரல் 2-ஆம் தேதி பல மொழிகளில் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பூட்டுதலில் இருப்பதால், வெளியீட்டை ஒத்திவைத்துள்ள தயாரிப்பாளர்கள், புதிய ரிலீஸ் தேதியையும் இன்னும் அறிவிக்கவில்லை.சஸ்பென்ஸ்-த்ரில்லரான இப்படம் நேரடியாக OTT தளங்களில் வெளியாகும் என்று சமீபத்தில் வதந்திகள் பரவின. அதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளர் Kona Venkat “திரையரங்க வெளியீடே எங்கள் சிறந்த முன்னுரிமை" நிலைமை நீண்ட காலத்திற்கு சாதகமாக இல்லாவிட்டால், எங்கள் மாற்று வெளியீடாக OTT இயங்குதளம் இருக்கும்” என்று கூறியிருந்தார். மேலும், தனிக்கைக் குழுவும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட அறிவுறுத்தியதாகக் கூறியுனார்.இந்நிலையில், தயாரிப்பாளர் கோனா வெங்கட் தனது ட்விட்டர் கணக்கில் ஒரு வாக்கெடுப்பைப் பகிர்ந்து கொண்டார். அதில் ரசிகர்கள் படத்தை எங்கு பார்க்க விரும்புகிறார்கள் என்று வாக்களிக்கும்படி கேட்டிருந்தார். வாக்கெடுப்பில் தியேட்டர்கள், OTT மற்றும் எதுவாக இருப்பினும் சரிதான் என மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருதன. அதில் OTTக்கு ரசிகர்கள் 56 சதவீதத்துடன் வாக்களித்தனர்.பின்னர் தயாரிப்பாளர் ட்விட்டர் வாக்கெடுப்பு மூலம் ரசிகர்கள் அளித்த பதிலுக்கு நன்றி தெரிவிப்பதாக ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். கோனா வெங்கட் தனது ட்வீட்டில், “உங்கள் கருத்துக்கு நன்றி. அனைவரையும் திருப்திப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், உங்கள் ஒத்துழைப்பு எங்கள் அணிக்கு மிகவும் மதிப்புமிக்கது” என்று எழுதினார்.