சட்டப்படி நடவடிக்கை - ஓ.டி.டி. ரிலீசுக்கு எதிராக டி.ராஜேந்தர் காட்டம்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் ஜூம் செயலி மூலம் நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இன்றைக்கு வந்திருக்கலாம் ஓ.டி.டி. தளம், ஆனால் இத்தனை காலமாக பல நட்சத்திர நடிகர்களுக்கு படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்கள் மட்டுமே சேர்த்தோம் பலம். கொரோனா காலத்திலே திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கிறது. திரையுலகம் மூச்சுமுட்டி கிடக்கின்றது. ஓ.டி.டி. தளத்திலே நட்சத்திர அந்தஸ்துள்ள படத்தை வாங்குவார்கள்.