முழு சுதந்திரம் கொடுத்த எளிமையான மனிதர்”… இயக்குனர் பாபு சிவன் மறைவு குறித்து உருகும் விஜய் ஆண்டனி!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

இயக்குனர் பாபு சிவன் மறைவிற்கு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இரங்கல் தெரிவித்துள்ளார்.2009ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வேட்டைக்காரன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாபு சிவன். இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் வேட்டைக்காரன் படத்திற்குப் பிறகு வேறெந்த படத்தையும் இயக்கவில்லை. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாபு சிவன் முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்பதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாபு சிவன் நேற்று இரவு காலமானார்.விஜய் ஆண்டனி இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். வேட்டைகாரன் படத்திற்கு விஜய் ஆண்டனி தான் இசையமைத்தார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “வேட்டைக்காரன் இயக்குனர் பாபு சிவனின் திடீர் மறைவு குறித்து நான் மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். வேட்டைக்காரன் படத்தில் எனது ஐடியாக்களை செயல்படுத்த எனக்கு முழு சுதந்திரம் அளித்த அவர் மிகவும் எளிமையான மனிதர். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.