விட்ட படத்தை மீண்டும் தொடங்கிய இயக்குனர் ஹலீதா ஷமீம்

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பூவரசம் பீப்பீ படத்தை குழந்தை நட்சத்திரங்களை மையமாக கொண்டு இயக்கிய ஹலீதா  ஷமீம், சில்லுக்கருப்பட்டி படத்தை காதலை மையமாக கொண்டு இயக்கினார். தற்போது குழந்தைகளை மையமாக கொண்டு மின்மினி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் 5 நண்பர்களின் குழந்தை பருவம் மற்றும் பதின்ம பருவத்தை மையமாக கொண்டது. இதனால், குழந்தை பருவ காட்சிகளை ஏற்கனவே படமாக்கிவிட்ட ஹலீதா ஷமீம், பதின்ம வயது காட்சிகளை படமாக்க அந்த குழந்தைகள் வளரும் வரை 5 வருடங்கள் காத்திருந்தார். மின்மினி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள், இப்போது பதின்ம வயதை தொட்டுவிட்டதால் மீண்டும் பணிகளை தொடங்கி இருக்கிறார்.இதுகுறித்து ஹலீதா ஷமீம் கூறியதாவது: அன்புக்குரியவர் களின் கனவுகளுக்காக நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள்? காதலுக்கும், வெறுப்புக்கும் இடையிலான அந்த மெல்லிய கோடு எது? பெரியவர்களை விட பதின்ம வயதினர் ஏன் உணர்ச்சி வசப்படுகிறார்கள்? இதுதான் மின்மினி படத்தின் உள்ளடக்கம். இதன் முதல் பாதியை 2015ல் படமாக்கினோம். 5 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாதியை இப்போது தொடங்கி இருக்கிறேன். பதின்ம வயது கேரக்டருக்கு அவர்களின் சாயல் உள்ளவர்களை நடிக்க வைப்பதை விட, அவர்களை வளரும் வரை காத்திருந்து படம் பிடிப்பது இன்னும் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று நம்பினேன். அவர்கள் வளர்ந்து விட்டார்கள். நானும் இரண்டாம் பகுதி பணியை தொடங்கிவிட்டேன்.