வெளியானது வாத்தி ரைட் பாடலின் புதிய ப்ரோமோ, செம்ம மாஸ் காட்டும் தளபதி விஜய்..!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.மேலும் 100% இருக்கைகளுடன் தமிழகத்தில் வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம், மத்திய அரசின் உத்தரவை அடுத்து 50% இருக்கைகளுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தினமும் ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி வரும் நிலையில், தற்போது வாத்தி பாடலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.