விஜய்யுடன் இணையும் சூப்பர் சிங்கர் பிரபலம்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த சூப்பர் சிங்கர் பூவையார் தற்போது ‘தளபதி 65’ படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.பிகில், மாஸ்டர் படங்களை அடுத்து விஜய் நடிப்பில் நெல்சன் இயக்க இருக்கும் ‘தளபதி 65’ படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.விஜய்யுடன் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் பூவையாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 65’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.