தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும், மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

இந்நிலையில் சென்னை திநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எனக்கு தாய் வீடு. 7 மாதங்களுக்கும் மேலாக முடிக்கிடக்கும் திரையரங்குகளை 50 சதவிதம் பார்வையாளர்களுடன் அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பல நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் திரையரங்கு டிக்கெட்களுக்கு விதிக்கப்படும் 12% ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் . அதேபோல் தமிழக முதல்வர் 8% கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்.ஓடிடியில் பெரிய படங்கள் மட்டுமே வெளியாகிறது’ என்று வேதனை தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், ‘திரையுலகில் திமிங்கலங்கள் மட்டும் தான் வாழ வேண்டுமா? சின்ன மீன்கள் வாழக் கூடாதா?இதனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதிவிக்கு நான் போட்டியிடுகிறேன். மன்னன் பிலிம்ஸ் மன்னன் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். எங்கள் அணியில் இடம்பெறும் மற்ற நபர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும்’ என்றார்.