தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையான ராஷ்மிகாவுக்கு கூகுள் மகுடம் சூட்டியுள்ளது!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படங்கள் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதையடுத்து தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. இந்தநிலையில் இந்த 2020-ம் ஆண்டு தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தேடவைத்தவர் என்கிற மகுடத்தை ராஷ்மிகாவுக்கு கூகுள் வழங்கியுள்ளது. கூகுள் தேடுபொறியில் ‘National Crush of India 2020’ என தேடினால், ராஷ்மிகாவின் பெயரும், அவர் குறித்த விபரங்களையும் காட்டுகிறது கூகுள். இந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட பாலிவுட் நடிகைகளைக் கூட, கூகுள் தேடலில் பின்னுக்குத்தள்ளி ராஷ்மிகா இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.நடிகை ராஷ்மிகா அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. இதுதவிர தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.