தளபதி 65’ பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விஜய் தேர்தல் முடிந்ததும் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா சென்று இருந்தார். விஜய், பூஜா ஹெக்டேவின் காதல் மற்றும் டூயட் பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர்.இந்தநிலையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.இதுகுறித்து பூஜா ஹெக்டே டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.