மெலிந்த தோற்றத்துக்கு மாறிய நடிகை இந்துஜா - வைரலாகும் புகைப்படங்கள்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இந்துஜா. இதையடுத்து மெர்குரி, 60 வயது மாநிறம், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், விஜய்யின் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது காக்கி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இந்துஜா. இப்படத்தில் அவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார்.