கொரோனா பாதிப்பு எதிரொலி.... விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பும் நடிக்க ஒப்பந்தமாகினார்.இப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் 15-ந் தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் நடிகை கத்ரீனா கைப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால், படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்ட போதிலும், நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருவதால், படப்பிடிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர்.இதுதவிர நடிகர் விஜய் சேதுபதி காந்தி டாக்கீஸ், மும்பைகார் போன்ற இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இதில் மும்பைகார் படம், தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.