நடிகர் ஆதி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஸ்வின் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்தபடத்தை தயாரிக்கிறது.அத்துடன் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் ஆதி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், அப்படத்தினை ஹிப் ஹாப் ஆதியே இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது.இந்தப் படத்திற்கு சிவகுமாரின் சபதம் என தலைப்பு வைத்திருப்பதாகத் தெரியவருகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் ஹிட் கொடுத்து வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இதுவரை அவர் நடித்த படங்கள் எல்லாமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.