மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இத்தனை சதவிகித ஷூட்டிங் முடிந்தது

Print yarlcine.com in சினிமா செய்திகள்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.மேலும் கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் படப்பிடிப்பு 70% நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.