பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் காலமானார்!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) சென்னையில் உடல்நலக்குறைவினால் காலமானார். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு, படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய லாபம் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் இன்று காலமானார்.முதல் படமான இயற்கை படத்திற்கு தேசிய விருது பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த அவர் மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மயக்கமடைந்த அவரை அவரின் உதவியாளர்கள் உடனடியாக மீட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் ஜனநாதனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.