அட்லீ இயக்கும் பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்?

Print yarlcine.com in சினிமா செய்திகள்

2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ. இதையடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.இந்நிலையில், அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே அட்லீயுடன் மெர்சல், பிகில் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.